முழு மதி, வளர் பிறை,கடல் அலை, தவழும் மேகம், கொட்டும் அருவி, வான் முட்டும் மலைகள், அசையும் கிளைகள், மண் வாசனை,அந்தி நேர ஆதவன்,தோகை மயில், ஓடும் ஆறு, துள்ளும் மீன்,எதிலும் அழகு ! கண்ணில் காணும் காட்சிகளை, நெஞ்சில் உதிக்கும் எண்ணங்களை எல்லாம் கவிதையாய் , ஓவியமாய், கலையாய் படைக்க முனைகிறேன்.அம்முயற்சிகள் நிறைவு, இன்பம், படிப்பினை, என பல உணர்வுகளை தந்திருக்கின்றன. என் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நொடிகள் அவை.
வண்ணங்களுடன் என் எண்ணங்கள் உறவு கொண்ட போது உருவான காதல் குழந்தைகள் பதிவுகளாக இங்கே
No comments:
Post a Comment