Friday, April 17, 2020

முன்னுரை என்று வைத்து கொள்வோம்

     முழு மதி, வளர் பிறை,கடல் அலை, தவழும்  மேகம், கொட்டும் அருவி, வான் முட்டும் மலைகள், அசையும் கிளைகள் , மழை நனைத்த மண் வாசனை,அந்தி நேர ஆதவன்,அழகிய மலர்கள், அதன் மேல் பனி துளி, ஆடும் மயில், அதன் தோகையில் இறைவன் தீட்டிய ஓவியம்,  ஓடும் ஆறு, துள்ளும் மீன் ... எதிலும் அழகு ..அழகில் ஒரு ஆழம்...ஆழத்தில் புதைந்திருக்கும் வாழ்க்கை தத்துவங்கள்...

கண்ணில் காணும் காட்சிகளை, நெஞ்சில் உதிக்கும் எண்ணங்களை  எல்லாம் கவிதையாய் , ஓவியமாய், சித்திரமாய், கலையாய் படைக்க முனைகிறேன்...

சில முயற்சிகள் நிறைவை, சில முயற்சிகள் ஆனந்தத்தை, சில முயற்சிகள் படிப்பினையை , சில முயற்சிகள் தாக்கத்தை , சில முயற்சிகள் உந்துதலை தந்திருக்கின்றன ....

உணர்ச்சி எதுவாயினும், கலையுடன் நான் கழித்த காலங்கள் எல்லாம், என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அறிவுள்ளதாக , அமைதியுள்ளதாக ஆக்கியிருக்கின்றன...

நாளைய வாழ்க்கை நிச்சயமற்றது எனில், இன்றைய வாழ்க்கையின் அர்த்தங்களை பதிவு செய்து , நாளைய நாட்களின் அமைதிக்கு அது அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் , வண்ணங்களுடன் என் எண்ணங்கள் உறவு கொண்ட போது உருவான காதல் குழந்தைகள் பதிவுகளாக இங்கே ...

No comments:

Post a Comment