Tuesday, September 1, 2020

மனம் மகிழ செய்த மலரோவியம்


 வாழும் நொடிகள் வெறுமையாய் தோன்றிய போதெல்லாம், அர்த்தம் இல்லாத பயணம் இதுவோ என்ற கேள்வி எழும் போதெல்லாம் ..பள்ளம் தேடும் வெள்ளம் போல், கலையை நாடி ஓடும் பக்குவம் பெற்று விட்டது என் மனம்.  அத்தகு ஒரு தருவாயில், அழிவில்லா பதாகையில்  இறைவன் தீட்டிய இயற்க்கை ஓவியத்தை நான் பிரதிபலிக்க  முயற்சித்த பொழுது ...மேகம் மறைக்கும் கொடிகளும்  ... கொடிகளை மறைக்கும் மலர்களும் ... தீபம் சுமக்கும் விளக்குகளும்.....என் சோகம் மறக்க செய்தன..... 

No comments:

Post a Comment